Translate

திங்கள், 7 நவம்பர், 2016

                           AIBSNLPWA சிதம்பரம் பகுதி       மாதாந்திரக்கூட்டம் 3-11-2016

 தோழர் இஸ்மாயில் தலைமையில் AIBSNLPWA சிதம்பரம் பகுதி மாதாந்திரக்கூட்டம் 3-11-2016 அன்று சிறப்பாக நடந்தேறியது.65 ஓய்வூதியர்கள் 25 மகளிர் கலந்துக் கொண்டனர். தோழர் A.ஜெயகுமார் சிதம்பரம் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் NT K.இளங்கோவன், S.அசோகன் , S.ஹாஜா கமாலுதீன் உரை நிகழ்த்தினார்கள்.
சிதம்பரம் பகுதியை சார்ந்த ஓய்வூதியர்களின் மாவட்ட சங்கத்தால் கணக்கிடப்பட்ட 78.2 IDA உத்தேச நிலுவைத் தொகை தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் பகுதி மாதாந்திரக்கூட்டம் நடத்துவதற்கு இதுகாரும் இலவசமாக இடம் கொடுத்து உதவும் தோழர் A.ஜெயகுமார் அவர்களின் நண்பருக்கு உளமார நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்ட அரங்கிற்காக பிளாஸ்டிக் நாற்காலிகள் நன்கொடை அளித்த தோழர்கள் தட்சினாமூர்த்தி,பாலகிருஷ்ணன்,அவர்களுக்கும்,ரூ5000 நாற்காளிகள் வாங்க நன்கொடை வழங்கிய சுசிலா கருணாநிதி அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு இனிப்புடன் கூடிய சிற்றுண்டி,மதிய உணவளித்த திருமதி பொன்னம்மாள் கன்னையனுக்கு அனைத்து ஓய்வூதியர்களும் பலத்த கரவொலிக்கிடையே பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த கூட்டத்திற்கு உணவு செலவுகளை ஒவ்வொரு தோழர்கள் தாங்களாகவே முன்வந்து அளித்து மகிழ்வதை மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது.

மூத்த தோழர் சுதாகரன் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக