ஓய்வூதியர் தினம் மற்றும் விழுப்புரம் பகுதிக்கூட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
ஓய்வூதியர் தினம் மற்றும் விழுப்புரம் பகுதிக்கூட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 08-12-2014 அன்று காலை 9மணியளவில் ஆசான் திருமண்டபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.தோழர் K.முத்தியாலு அகில இந்திய அமைப்புச்செயலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.
தோழர் G.வேதாச்சலம் தலைமையில் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.தோழர் D.ராமலிங்கம் பங்கேற்ற அனைவரையும் பேரு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
AIBSNLPWA கடலூர் மாவட்டம் தலைவர் தோழர் .K.வெங்கடரமணன், மாவட்ட செயலாளர் K.சந்திரமோகன், பொருளாளர் N.திருஞானம்,உதவித்தலைவர் P.ஜெயராமன் மாநில துணை தலைவர் K.இரவீந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினர். விழுப்புரம் பகுதியில் ஒவ்வொரு மாதத்தின்.5-ஆம் தேதி ஓய்வூதியர்கள் தவறாமல் சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாய் பல பிரச்னைகளை தீர்த்து வைத்து மூன்றாம் ஆண்டு விடியலில் அடிஎடுத்து வைப்பது பற்றி எல்லோரும் பெரு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தோழர் சபாபதி தோழர் K.முத்தியாலு அகில இந்திய அமைப்புச்செயலர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் K.முத்தியாலு . 78.2, ஓய்வூதிய முரண்பாடுகள் நிலை மற்றும் ஓய்வூதியர் தினம் பற்றி சுமார் 90 நிமிடங்கள் பேருரை ஆற்றினார்.
பொருளாளர் N.திருஞானம் அவர்கள் நமது நிதி நிலைமை,320 ஆயுள் உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக பீடு நடை போடுவதைப் பற்றியும் நாம் இன்னும் செல்ல வேண்டிய பாதையையும் எடுத்துரைத்தார்.
NFTE விழுப்புரம் கிளைசெயலர் தோழர் கணேசன் , FNTO விழுப்புரம் கிளைசெயலர் தோழர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கி கௌரவித்தனர்.
தோழர் B.துரைபாபு மாவட்ட துணைச்செயலர் அவர்கள் விழுப்புரம் பகுதி கூட்டங்களுக்கு எவ்வாறு முன்முயற்சி எடுத்து 120 உறுப்பினர்களில் 75 ஆயுள் உறுப்பினர்களை உருவாக்கி பல பிரச்னைகளில் உறுப்பினர்களுக்கு உதவியாக இருப்பதையும்,உறுப்பினர்கள் அல்லாதவரை எப்படி செற்பதையும் எடுத்துக் கூறினார்.
தோழர் ஜோ.வெற்றி மாவட்டத்துணைத்தலைவர் அவர்கள் விழுப்புரம் பகுதியில் நமது வளர்ச்சியினையும்,நமது உறுப்பினர்களின் பங்கினையும் கூறினார்.
தோழர் சண்முகசுந்தரம் மாவட்ட தணிக்கையாளர் நமது உறுப்பினர்கள் ஜாயின்ட் கணக்கு தன்னுடைய துணையுடன் மாற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும்,வருமான வரி வராமல் தடுக்க சேமிக்க வேண்டியதையும் அறிவுறுத்தினார்.
120 உறுப்பினர்கள் பங்கேற்றனர் கடலூர், சிதம்பரம்,விருத்தாசலம், திண்டிவனம்.செஞ்சி, உளுந்தூர்பேட்டை,அறம்கண்டநல்லூர் மற்றும் கள்ளக்குறிச்சி- இலிருந்து நமது பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தோழர் V.அரிகிருஷ்ணன் எல்லோருக்கும் நன்றிகூறினார்.
மதிய உணவுக்கு பின் கூட்டம் இனியே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக