Translate

புதன், 17 செப்டம்பர், 2014

 வது  AIBSNLPWA அமைப்பு தினம் கடலூர் 

தோழர்கள் இரவீந்திரன்,சந்திரமோகன்,திருஞானம்,வெங்கடரமணன்,
சுகுமாரன் மாநில உ.தவிதலைவர் ,
பாலகிருஷ்ணன்,ராமாராவ் மாநில செயலர்,அன்பழகன் மாநில உதவி  செயலர்

முதுபெரும் ஓய்வுப்பெற்ற FNTO தொழிற்சங்க தலைவர் திரு சொரூபன்
நமது மாநில நிர்வாகிகளுடன் மேடையில் 
 வது  அமைப்பு தினம்  கடலூர் மாவட்ட கிளை சார்பாக 13.9.2014       அன்று மாலை 3 மணியில் இருந்து 8 மணி வரை கடலூர் டவுன் ஹாலில் விமரிசையாக   நடத்தப்பட்டது . தோழர் K.வெங்கடரமணன், தலைமையில் சுகுமாரன் மாநில உ.தவிதலைவர் ,V.ராமாராவ் மாநில செயலர்,அன்பழகன் மாநில உதவி  செயலர் கலந்துக்கொள்ள சிறப்பாக நடந்தேறியது.25பெண் உறுப்பினர்கள் உட்பட 200 உறுப்பினர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்..தோழர்கள் அசோகன் SNEA மத்திய செயற்குழு உறுப்பினர்,N.பாலகிருஷ்ணன் SNEA தலைவர்,பாண்டுரங்கன் SNEA மாவட்டச்செயலர், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட தலைவர் தோழர் K.வெங்கடரமணன், தனது தலைமை உரையில் 8-7-2007 இல் கடலூரில் TNBPA ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 20-8-2009 இல் அகிலஇந்திய சங்கம் சென்னையில்தான் துவங்கபட்டதையும் நினைவுறுத்தி நமது நீண்ட பயணத்தையும்,நமது தோளோடு தோளாக உழைத்து நம் சங்கத்தை வளர்த்த தோழர்களையும் மலரும் நினைவுகளாக மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்.நாம் ஒரு காலாண்டு இதழ் ,தமிழில் ஒரு இணையம் நடத்துவதையும் தகவல் தொடர்பு நம் உறுப்பினர்களோடு சிறப்பாக இருப்பதையும் ,அதனால் நம்மை முழுமையாக நம்பி நம்மோடு உறுதுணையாக செயலாற்றும் தோழர்களையும்  நினைவு கூர்ந்தார்.

மாவட்ட உதவித்தலைவர்  தோழர். P.ஜெயராமன்  அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வயதில் குறைந்த ஆர்வமுள்ள செயலூக்கம் நிறைந்த இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற  நமது சங்க அறிவுறுத்தலின் பேரில் நாம் தோழர் சந்திரமோகன் அவர்களை 7மே2014 மாவட்ட மாநாட்டில்  நமது மாவட்டச் செயலராக தேர்ந்தேடுக்கப்பட்டதையும்,அவர் ஆவணங்களை தயார் செய்து பல்வேறு தளங்களில் போராடி நம் உறுப்பினர்களுக்கு செய்த சேவைகளை பட்டியல் இட்டார். நம் முன்னணி தோழர்கள் திண்டிவனம்,செஞ்சி,கடலூர்,சிதம்பரம்,விழுப்புரம்,விருத்தாசலம்  முதலிய ஊர்களில் எவ்வாறு ஆர்வமுடன் செயலாற்றி உறுப்பினர்களின் நலன் காக்கிறார்கள் என்பதனை விளக்கி கூறினார்.

தோழர் சந்திரமோகன் மாவட்டச்செயலர் அவர்கள் கடந்த 4  மாதங்களில் சிறப்பாக செயல்பட காரணமாக இருந்த முன்னணி தோழர்களை நினைவு கூர்ந்தார்.குறிப்பாக தோழர் P.ஜெயராமன் அல்லும்,பகலும் முழு நேர ஊழியராக மாவட்டத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கும் நல்லது,கெட்டது நேரங்களில் தவறாது அவர் செய்த சேவைகளை எடுத்துரைத்து அவராலேயே கடலூர் மாவட்ட கிளை சிறப்பாக இயங்குவதை பாராட்டி பேசினார்.நம்மை தவிர மற்ற மாநில,மத்திய,இராணுவ ஓய்வூதியர்களுக்கும் செய்த பல அளப்பரிய சேவைகளால் நம் சங்கம் பெற்ற நன்மதிப்பை விளம்பினார்.மதுரை மாவட்டச்செயலர் தோழர் M.தர்மராஜ் தன் உடல் நிலைமை காரணமாக வரமுடியாததை தெரிவித்து நமக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்ததை அவையில் படித்துக் காட்டினார்.சமீபத்தில் சிதம்பரத்தில் ஒரு கிளை அலுவலகம் திரு ஜெயகுமார் அவர்களால் அமைக்கபட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.தான் எல்லா மாத கிளை கூட்டங்களுக்கு சென்று அவர்கள் குறைகளையும் கண்டறிந்ததையும், அதற்காக செய்த வேலைகள்,தீர்க்கப்பட்டவைகள் அனைத்தையும் கூறினார்.மெடிகல் பில்கள்,அடையாள அட்டை,ERP முதலியவற்றை அவர் தலைமையில் எவ்வாறு சீர் செய்தோம் என்பதையும் விளக்கினார் 290 ஆயுள் உறுப்பினர்களாக நாம் வளர்ந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



தோழர் N.திருஞானம் அவர்கள் . தோழர் அன்பழகன்  மாநில உதவிச்செயலர் அவர்களை வரவேற்று அவரைப்பற்றி கீழ்கண்ட குறிப்புக்களை தெரிவித்தார்.
தோழர் அன்பழகன்  மாநில உதவிச்செயலர்
·         இவர்  1975 –இல் புதுச்சேரி மத்திய தந்தி அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.
·         திரு ரகுபீர்சிங் தலைமையில் மினிஸ்டிரியல் சங்கத்தில் பல பொறுப்புகளில் இருந்தார்.
·         FNTO வில் மாவட்ட,மாநில,மத்திய நிர்வாகியாக பல பதவிகள் வகித்தவர்.
·         INTUC புதுச்சேரி பல தொழிற்சங்க அமைப்புகளில் நிர்வாகியாக இருந்தவர்.
·         புதுச்சேரி,மாநில கூட்டு பொது குழுவில் அங்கம் வகித்தவர்.
·         BSNL இல் சேர்ந்தபோது NFTE- T 3 இல் மாநில உதவிச்செயலராக இருந்தவர்
·         ஊழியர்களுக்காக டிபன்ஸ் –ஆக வாதிட்டவர்.

தோழர் அன்பழகன்  மாநில உதவிச்செயலர் அமைப்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார்.நாம் இந்த சங்கத்தில் இருப்பதுதான் ஓய்வூதியர்களுக்கு நலம் பயக்ககூடியது என்றுரைத்தார்.உங்கள் நண்பரை சொல்லுங்கள்,உங்களை பற்றிச் சொல்கிறேன் என்று சொல்வார்கள்.நாம் இந்த சங்கத்தில் இருப்பதால் நம்மை உயர்வாக நினைக்கின்றார்கள்.நாம் இதுகாரும் நம் ஓய்வூதியர்களுக்கு செய்த சேவையினால் நாம் அந்த உயர்வினை பெற்றிருக்கின்றோம் என்று கூறி நாம் மேலும் உறுப்பினர்களை சேர்த்து வளரவேண்டும் என்றார்.
AUDIENCE









     தோழர் இரவீந்திரன்  மாநில உதவித்தலைவர் தான் ஆரம்பகாலங்களில் FNTO,ஒன்றுபட்ட NFTE சங்கங்களில் இருந்ததையும்,அதற்கு பிறகு  தோழர் A.சுகுமாரன் தலைமையில் அவர் வழிகாட்டுதலில் JETA,TESA,இருந்து கடைசியில் SNEA சங்கத்தில் இருந்து ஒய்வு பெற்றதையும் நினைவு கூர்ந்து அப்படிப்பட்ட தலைவர் நமது சங்கத்தில் இணைந்து,GM முதல் RM வரை,சங்க,கட்சி வேறுபாடு இன்றி நாம் எல்லோரும் ஒரு குடையின் கீழ்  ஒற்றுமை கட்டிக்காப்பதில்  பங்காற்றுவது மனதிற்கினிய அனுபவமாக உள்ளது என்று கூறினார். தோழர் A.சுகுமாரன் முன்னமே ஒரு முறை வருவதாக இருந்து தற்போது இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி என்று கூறினார்.


தோழர் A.சுகுமாரன் மாநில உதவித்தலைவர் அவர்கள் இந்த சங்கம் 20-8-2009 அன்று சென்னையில் 600 சார்பாளர்களுடன் 18மாநிலங்களில் இருந்து வந்த தலைவர்களுடன் சங்க,கட்சிவேறுபாடின்றி தோழர்கள் ராமன்குட்டி,கோபாலகிருஷ்ணன்,நடராஜன் முதலான தேசிய தலைவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை நமது வளர்ச்சியினையும் பெருவாரியான DOT,BSNL ஓய்வூதியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நாம் விளங்குவதையும் ஒரு வரலாற்றினை எடுத்துரைத்தார்.78.2% IDA தற்போதைய நிலை,7 வது சம்பளக்கமிஷனுக்கு நாம் கொடுத்த குறிப்புகள்,பெங்களூர் 7 வது சம்பள கமிஷன் அமர்வில் திரு கங்காதர்ராவ் அகில இந்திய உதவி பொது செயலர்,திரு மூர்த்தி கர்நாடகா மாநிலச்செயலர் நம் சங்கத்தின் சார்பாக கலந்துக்கொண்டு மாண்புமிகு நீதி அரசர் மாத்தூர் (ஒய்வு) தலைவர் 7 வது சம்பள கமிஷன் முன் நமது நிலையினை எடுத்துக் கூறியதையும் விளக்கினார்.,

கடலூர் பகுதில் செப்டம்பர் மாதத்தில் திருமண நாள்,பிறந்தநாள் வருபவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறி கௌரவிக்கப்பட்டனர்





 மாவட்ட தலைவர் தோழர் K.வெங்கடரமணன் அவர்கள் தோழர் V.ராமாராவ் மாநிலச்செயலர் நம் சங்க சேவையோடு நங்கநல்லூர் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கத்தில் செய்த சேவையையும்.எக்சோநரா அமைப்பில் பொது சுகாதாரத்திற்காக பொதுமக்களுக்காக செய்த பயன் நோக்கா செயல்களையும்,ஆற்காடு ஊருக்கு அருகாமையில் ஒரு சிற்றூருக்கு எக்சோநரா அமைப்புடன் இணைந்து குடி நீருக்காக செய்த பணியையும்,பல பொது நோக்கு காரியங்களில் அவரது அயராத உழைப்பையும் பாராட்டி பேசினார்.


தோழர் V.ராமாராவ் மாநிலச்செயலர் அவர்கள் தன்னுடைய உரையை ஆரம்பிப்பதற்கு முன் இரவீந்திரன் மாநில உதவிச்செயலர் அவர்களுக்கு AIBSNLPWA தமிழக இணைய சேவையை 2014 தமிழ் புத்தாண்டிலிருந்து தொடங்கி,தொடர்ச்சியாக சிறப்பாக நிர்வகித்து வருவதை பாராட்டி பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.

சிதம்பரத்தில் திரு A.ஜெயகுமார் அவர்கள் தன் சொந்தபொறுப்பில் ஒரு சங்க அலுவலகம் நம் ஓய்வூதியர்களுக்கான சேவைக்காக 7-9-2014லிருந்து தொடங்கியதற்காக மாநில செயலர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மத்திய,மாநில ஆணைக்கிணங்க ஆயுள் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை மேடையில் முதல் 60 பேருக்கு வழங்கினார்.



தொடர்ச்சியாக நாம் இது வரை பெற்ற சங்க சாதனையாக 2007க்கு முன் ஒய்வு பெற்றோருக்கும் பென்ஷன் உயர்வு,நிலுவை பெற்று தந்தது,ஒரு இன்கிரிமன்ட் பெற்று தந்தது,பென்ஷன் முரண்பாடுகளுக்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, 7 வது சம்பள கமிஷன் முன் BSNL ஊழியர்களுக்கான ஓய்வூதிய மாற்றங்கள்  ,பல்வேறு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான கோரிக்கைகள்,BSNL குடியிருப்புகளை வாடகைக்கு பெற்று தந்துள்ளது,பிராட்பேண்ட் சேவை கட்டண குறைப்பு,ஓய்வூதியர்களின் நிலுவைகள் பிரச்னைகளை அதாலத் முதலிய மன்றங்கள் மூலமாக சரி செய்தது, எல்லாவற்றையும் தொடர்ச்சியாக எடுத்துரைத்தார்.ஊழியர்களுக்கு இணையான 78.2% IDA மாற்றத்தில் மிக அதிகமான தாமதத்தினை தவிர்க்க வரும் 19-9-2014 அன்று ஆர்பாட்டங்கள் நடத்தவேண்டும் என்றார்.இந்தியா முதலிய உலகம் முழுமைக்கும் உள்ள வேலை இல்லா திண்டாடத்தை .மையபடுத்தி வரும் 3-10-2014 அன்று கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று கூறினார்.  
சுவையான இனிப்பும்,சிற்றுண்டியும்,தேநீரும் அளிக்கப்பட்டது.
தோழர்  N.திருஞானம் பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக