Translate

செவ்வாய், 24 செப்டம்பர், 2013




மலர்  24

கடலூர் GM  BSNL அலுவலகம் முன்பாக  23-9-2013 அன்று  ஆர்ப்பாட்டம் 


Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                                          Email: aibsnlpwacuddalore@gmail.com
                                          Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai





நமது மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க 

(1) பென்ஷன் முரண்பாடுகளை தீர்க்க கோரியும், 


(2) 78.2% IDA 
இணைப்பை பென்ஷனர்களுக்கும் 

அளிக்க கோரியும்
 

நமது தொலைபேசி மாவட்ட தலைநகர் கடலூரில் GM  BSNL அலுவலகம் முன்பாக  23-9-2013 அன்று  மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. நமது உறுப்பினர்கள் 100 பேர் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.SNEA சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துரை வழங்கினர்.






உணவு இடைவெளிக்குப் பிறகு கடலூர் டவுன் ஹாலில் K.ரவீந்திரன் மாவட்டத் தலைவர் தலைமையில் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.


தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர் தலைநகர் டில்லியில் 23-10-2013 அன்று நடக்க இருக்கும் தர்ணாவுக்கு கலந்துக் கொள்ள பயண சீட்டுகள் முன்பதிவு செய்துள்ள  நமது உறுப்பினர்கள் 40 பேரின் பெயர்களை வாசித்தார்.  SNEA சங்க நிர்வாகிகள் தோழர் N.பாலகிருஷ்ணன்,R.அசோகன்,C.பாண்டுரங்கன் நமக்கு அளித்து வரும் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
 
நமது கவுரவ தலைவர் தோழர் N.பாலகிருஷ்ணன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் நமது கோரிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
 
தோழர் R.அசோகன் SNEA அவரது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தோழர் C.பாண்டுரங்கன்  மாவட்ட செயலர் SNEA அவர்களது பொதுச்செயலர் 78.2% IDA இணைப்பை பென்ஷனர்களுக்கும்  அளிக்க DOT க்கு அளித்த கடிதத்தையும் நினைவு கூர்ந்து நமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

தோழர் N.திருஞானம் உதவிச்செயலர் நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

தோழர் துரைசாமி திண்டிவனம் உதவிச்செயலர் ஒவ்வொரு மாதமும்  பவுர்ணமியன்று செஞ்சி, திண்டிவனம் தோழர்கள் திண்டிவனத்தில்  நடத்தும் கூட்டங்கள் பற்றியும், விரிவாக எடுத்துரைத்து மாவட்டச்சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்ள கூறினார்.

தோழர் ஸ்ரீநிவாசன் SDE திருக்கோவிலூர் அவர்களிடம் அந்த பகுதி உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவர்களின் பிரச்னைகளுக்கு உதவிடுமாறு வேண்டுகோள் விடப்பட்டது.
 
தோழர் L.ஜகன்னாதன் TTA உளுந்தூர்பேட்டை அவர்களிடம் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை பகுதி உறுப்பினர்களுக்காக ஒன்றிணைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுகோள் விடப்பட்டது.

தோழர் A.ஜெயக்குமார் SDE சிதம்பரம் அவர்கள் பேசும்போது திரும்பவும் ஒரு கூட்டம் சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில் பகுதிக்காக நடத்த திட்டம் இருப்பதாக கூறினார்.


விழுப்புரம் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ந்தேதி நடத்தும் கூட்டங்கள் பற்றியும், எவ்வாறு எல்லா உறுப்பினர்களும் உற்சாகமாக கலந்துக்கொண்டு தங்கள் பிரச்னைகளை தீர்த்து கொள்வதைப் பற்றியும் தெரிவித்தனர்.

தோழர் R. பூபாலன் மாவட்ட நிதிநிலையைப் பற்றியும், 12-9-13 வரை மத்திய,மாநில பங்கு நிதியை அனுப்பியதைப் பற்றி கூறினார்.

தோழர் K.வெங்கடரமணன் மாவட்ட செயலர்  அவர்கள் எல்லா செய்திகளையும் ஒருங்கிணைத்து நமது செயல்பாடுகளையும், நமது 138 ஆயுள் உறுப்பினர் சந்தாவைப் பற்றியும் நினைவு கூர்ந்து, சந்தா,குடும்ப நல நிதி,பென்ஷன் பத்திரிகா சந்தா  செலுத்தாதவர்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். 

பொதுவாக தோழர்கள் மாவட்டத்தின் ஒரு இதழை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தமிழில் செய்திகளை தாங்கி வெளியிட வேண்டுகோள் விடுத்தனர்.

தோழர் G.அசோகன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.


ஒன்றுபடுவோம் ! போராடுவோம் !  வெற்றி பெறுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக