Translate

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கண்ணீர் அஞ்சலி
PS என்று எல்லோராலும் அழைக்க படுகின்ற P.சுப்ரமணியன் 17-12-2018 அன்று மறைவு.


AIBSNLPWA மற்றும் அவரது நண்பர்கள் இறுதி மரியாதையில் கலந்துக் கொண்டனர். அவரின் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கிறோம்.


எங்கள் P.S.
லெனின் போல உயரம் அதிகமில்லை
ஆழ்கடல் போல அத்தனை அமைதி
சிந்தனையும் அப்படித்தான், ஆழமானது
குணத்தால் நிறை குடத்தான், தளும்பான்!

விரிகருத்தால் கூர்மை அவன் பார்வை,
எரிமலை அன்ன சுட்டெரிக்கும், உண்மை!
எரிமலையின் சாம்பல்கூட சுடும், இவன்வார்த்தை
ஒருபோதும் சுட்டதில்லை ஒருவர் மனத்தை!
சீறிச் சினக்கும் சீயம் அமைதிகொள
சீதையாம் இலக்குமி உடனிருக்க வேண்டும்!
இதயம்கூட படபடத்து சப்தமிடாத போது
இவன் சுமந்தான் பேஸ்மேக்கர், விந்தை!
வாழ்க்கைச் சுழலில் சிக்காத படகில்லை
சுழலிலே உழன்றபோதும் முகம் சுழியான்!
மாடிஏற முடியாமல் போகும் என்றோ
தேடிஓடவில்லை பதவி உயர்வு தங்கிவிட்டான்--
பணிஓய்வு பெற்றவர்க்குத் தொண்டு செய்தான்;
பணிநிறைவு செய்யாமல் வாழ்வை நிறைத்தான்,
ஓய்வூதியர் நாளில் நெடுஓய்வு கொண்டான்!
புரட்சிகர கொள்கை உயர்த்திய தோழன்
இரெழுத்தால் நாமறிந்த நிறை அன்பன்!
இருபெண்கள் செல்வமென வாழ்ந்த தலைவன்
புரட்சி மங்கையின் பெயர்சூட்டி மகிழ்ந்தான்!
இல்லமும் இயக்கமும் இருகண்ணென இயங்கிய
எங்கள் பி.எஸ். இன்றில்லை, எப்படி நம்ப?
பாரி மகளிருக்கு அன்றிருந்தார் கபிலர்
அருமைத் தோழனுக்கு நாமிருப்போம் என்போம்!
போய் வா நண்பா!
உன் நினைவுகளைப் பத்திரமாய்
பூட்டி வைப்போம் நெஞ்சில்!
( இன்று விடியலில் இயற்கை எய்திய P S என அனைவரும் அன்போடு அழைக்கும் தோழர் p சுப்பிரமணியன், மேனாள் கடலூர் மாவட்டத் தொலைத் தொடர்பு சங்க NFTE மாவட்டச் செயலாளரின் நட்பை தோழமையை நினைந்து...
இறுதி நிகழ்வுகள் கடலூரில் நாளை மாலை அல்லது மறுநாள் காலையில் ......
   
நன்றி--செய்தியை பகிர்ந்துக்கொண்ட தோழர் நீலகண்டன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக