Translate

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கண்ணீர் அஞ்சலி

·         அடல் பிகாரி வாஜ்பாய்
தோற்றம்:25 டிசம்பர்1924      இறைவனடி: 16-8-2018

அடல் பிகாரி வாஜ்பாய் 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். 

இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர்

.முன்பு வகித்த பதவிகள் இந்தியாவின் 10வது பிரதம மந்திரி (1998–2004).

·         கல்வி: முதுகலை பட்டம் (அரசியல்)
                       Lakshmibai CollegeDAV College, Kanpur
.பணி: அரசியல்வாதிகவிஞர்
. புத்தகங்கள்:16
. கவிதைகள்:வாஜ்பாய் எழுதிய கவிதைகள், அவரின் கட்சியில்        மேற்கோள்  காட்டி பேசும் அளவுக்கு இருந்தது
இந்திய அரசியலில் அழுத்தமான கால்தடத்தைப் பதித்துள்ள தலைவர்களின் முக்கியமானவராகக் கருதப்படுபவர் அடல் பிகாரி 
.பாஜ.,கவை பிடிக்காதவர்களுக்கு பிடித்தமான பிரதமராக திகழ்ந்தார்.1.      இளம்வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் சிறை சென்றவர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்குக்கு ஆதரவாக செயல்படுவதற்கு முன் கம்யூனிசத்தில் இருந்தார்.
2.      1950ல் சட்டக் கல்லூரியின் படிப்பை பாதியில் நிறுத்தி ஆர்.எஸ்.எஸ் இதழில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ் இல் இருந்த போதே பாஜக.,வின் தாக்கம் ஏற்பட்டது.

. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டார்.


1.      1957 முதல் 10 முறை அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 

2009ல் அரசியலில் மும்முரமாக செயல்படுவதிலிருந்து ஒதுங்கும் வரை அரசியலில் சிறப்பாக இருந்தார்.
  பாஜக சார்பில் 5 வருடங்கள் முழுமையாக முதலில் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். 
மொராஜி தேசாய் பிரதமராக இருந்த பொழுது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், ஐ.நா.,வில் ஹிந்தியில் பேசினார்.

3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது.

அவர் பதவியில் இருந்தபோது சாலை திட்டங்களில் 50 சதவீதம் நிறைவேற்றினார்.தங்க நாற்கரை சாலையில் இவரது பங்கு மகத்தானது.

கவிதைகளும்,சிறந்த நூல்களும் எழுதுபவர்கள் எந்த வண்ணத்தில் இருந்தாலும் மனித நேயம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.


தங்கராசா வாஜ்பாய் இறந்துவிட்டாரே ..மதுரை சின்னபிள்ளை கண்ணீர் மல்க அஞ்சலி

சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை.
இதற்காக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் சின்னப்பிள்ளை அன்றைய பிரதமர் வாஜ்பாய் கைகளால் பெற்றார்.

இந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இயற்கை எய்தியுள்ளார். இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள மதுரை சின்னபிள்ளை என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய். அப்போது திடீரென எனது காலில் விழுந்து விட்டார் வாஜ்பாய். இதைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று அதிர்ச்சியாகி விட்டது.அப்போது எனக்கு அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறினார். 

அந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக