கண்ணீர் அஞ்சலி
தோழர் S.கனகசொருபன் |
தோழர்
S.கனகசொருபன்
01.06.2017 அன்று காலையில் 8
மணிக்கு இயற்கை எய்தினார்.
ஒன்றுபட்ட NFPTE பேரியக்கத்தின்
தலைவரும் , அனைவராலும்
குருஜீ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
FNTO
மூத்த முன்னாள் தலைவர்களில் . முன்னவராக
திகழ்ந்தவர்..
தோழர்கள் ஜமால்,சுப்பராமன், திரு வள்ளிநாயகம் முதலிய எண்ணற்ற முன்னணி
தோழர்களுடன் ஒரு பெரும் சக்தியாக விளங்கியவர்.
தோழர் ஜெகனோடு இருந்த சமகால சமமான தொழிற்சாங்க தலைவர்
ஆவார்..
தொலைதொடர்பு ஊழியர்களின் மூத்த தோழர், தன்னிரகற்ற தலைவன், கடலூர் ஊழியர்களின்
மத்தியில் தனக்கொரு தனி இடம் பிடித்த மாபெரும் தலைவரும் ஆவார்..
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற
எண்ணத்தோடு எல்லோரிடமும் கண்ணியத்துடன் நட்பு பாராட்டியவர்.
1960,1968 வேலை நிறுத்த போராட்டத்தில் முன்னிலை தலைமை
வகித்தவர்.
தி.மு.க. ஒரு மக்கள் எழுச்சியாக இருந்தபோது திருவாளர்கள்
அண்ணாதுரை,
கலைஞர்,பேராசிரியர் அவர்களுக்கு அன்புக்குரிய தம்பியாக
திகழ்ந்தவர்..
இவரது வீடு திருவாளர் அண்ணாதுரை,அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது..
ஒய்வு பெற்ற பிறகும் ஒன்றிணைந்த BSNL & DOT
ஓய்வூதியர் நலச்சங்கம் AIBSNLPWA –இன் ஒவ்வொரு கூட்டங்களிலும் நன்கொடை அளித்து
கலந்துக்கொண்டார்..நாம் செய்யும் நற்செயல்களை பாராட்டி நம் முன்னணி தோழர்களுக்கு
உற்சாகம் அளித்து வாழ்த்தினார்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நமது கடலூர் மாவட்டச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இரங்கல் கூட்டம் |
01.06.2017 அன்று மாலை இரங்கல் கூட்டம் அவரது இல்லத்தின் அருகே அனைத்து
தொழிற்சங்கங்க தலைவர்கள் தோழர்களுடன் அவரது போற்ற தகுந்த நினைவுகளை நினைவுறுத்தி நடந்தது. மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அன்னாரின் இறுதி ஊர்வலம் கடலூர் செம்மண்டலம், காந்தி நகரிலிருந்து (02-06-2017) காலை 9.00 மணியளவில் புறப்பட்டு அன்னாரின் மீளா உறக்கத்திற்கு .விடை கொடுக்கப்பட்டது.
Sekar Murugaian Remembering this
wonderful and dnamic soul forever who's to remain in our hearts. May his soul
rest in peace!
LET US ALL PRAY FOR HIS SOUL REST IN PEACE
பதிலளிநீக்குR.PERUMAL.AIBSNLPWA.COIMBATORE