கடலூர் AIBSNLPWA மாவட்டச்செயற்குழுக்கூட்டம் 9-4-2016
செயற்குழு உறுப்பினர்கள் கடலூர் பகுதி தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
தோழர் KVR தலைமை தாங்கி கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
தோழர் சந்திரமோகன் செயலர் மாவட்டத்தின் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தார்.ஆயுள் சந்தா தற்போது 460 உறுப்பினர்களை கொண்டுள்ளதையும்,ஓரிரு மாதங்களில் 500 இலக்கு நிர்ணயித்து செயல் படுவதையும் நமது உறுப்பினர்களின் பங்களிப்போடு இது நிறைவேறும் என்றுரைத்தார்.
ஜூன் 13-இல் நமது ஐந்தாவது மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.ரூ 300 குறைந்த பட்ச கொடையாக ஒவ்வொரு உறுப்பினறிடமிருந்தும் வசூல் செய்ய வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
தோழர் NT நிதி நிலைமை பற்றி தெரிவித்தார்.
மாவட்ட மாநாடு வரவேற்பு குழு தலைவராக KVR, செயலராக KCM அவர்களும்,உறுப்பினர்களாக G.அசோகன்,N.செல்வராஜ்,S.ஹாஜா கமாலுதீன்,D.தியாகராஜன்,J.வெற்றி,H.இஸ்மாயில் மரைக்காயர்,S.துரைசாமி,S.நாராயணசாமி,M.வடிவழகன்,L.ஜெகன்னாதன் இவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட மாநாடு உணவுக்குழு தலைவராக NT , உறுப்பினர்களாக T.ராமலிங்கம்,P.நாராயணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட மாநாடு பரிசு குழு G.அசோகன்,S.ஹாஜா கமாலுதீன் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர் NT அவர்கள் நன்றிக் கூறினார்.
மாலை கடலூர் பகுதி மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடந்தேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக