பிறப்பு: 1938ம் ஆண்டு மே 10ந் தேதி திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங்காடு -
தஞ்சாவூர் மாவட்டம்
படிப்பு:.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு.,
ஆரம்ப
அரசு பணி: 1963ம் ஆண்டு கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனம். 6 ஆண்டுகள்.
டாக்டர்
பட்டம்: இவருடைய சேவையை பாராட்டிய திண்டுக்கல்லை சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர்
பட்டம் வழங்கியது
மறைவு: 30-12-2013 திங்கள்கிழமை
இரவு 9 மணியளவில், தஞ்சை மாவட்டம்
பட்டுக்கோட்டை அருகே உள்ள
அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் காலமானார்.
மனஉறுதி: ரசாயன
உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய
முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை
உதறினார். இயற்கை வேளாண் முறைகளை
தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
சாதனை:
இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளவர் நம்மாழ்வார்,
தமிழக
இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் போன்ற 250-க்கும் அதிகமான நிறுவனங்களை
உருவாக்கி இயக்கங்களையும் நடத்தி வந்தார். எழுத்தாளராக, பேச்சாளராக,
போராளியாக அவர் ஆற்றிய சாதனைகள் ஏராளம்
உயரிய எண்ணம்: உணவே மருந்து, இயற்கை விவசாயத்தைப் பரப்புவதே என் கடமை
ஆகியவைதான் அவரின் முழக்கமாக இருந்தது.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற
வள்ளலாரின் வழிவந்தவர்.
தொலைநோக்கு:. கியூபாவின் இயற்கை விவசாயத்தை, தமிழகம்
முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஜப்பான் நாட்டின் இயற்கை வேளாண் விஞ்ஞானியும், பசுமை புரட்சியில் வெற்றி கண்டவருமான
"மசனொபு புகுவோகா"வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நம்மாழ்வார்
தமிழகத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில் தனது வாழ்க்கையையே
அர்ப்பணித்துக்கொண்டவர்.
75 வயதிலும் தளரறியா
உழைப்பு: காவிரி டெல்டா
மாவட்டங்களில் தனியார் நிறுவனத்தால் நிலத்துக்கு அடியில் மீத்தேன் வாயு எடுக்கும்
திட்டத்துக்கு எதிராக,
பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் கடந்த ஒரு மாதமாக
கிராமம் கிராமமாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நம்மாழ்வார்,
காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார்.
நூல்கள்: உழவுக்கு உண்டு வரலாறு', "தாய் மண்ணே வணக்கம்', "விதைகளே பேராயுதம்' என்பன போன்ற நூல்களை எழுதி விவசாயிகளை சிந்திக்க வைத்தவர். , பேரிகை என்ற
பெயரில் மாத இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார்,
.
தன்னார்வ மாதிரிபண்ணை.:கரூர் மாவட்டம் கடவூரில்
நம்மாழ்வார் நிர்மாணித்த 'வானகம்' என்ற இயற்கை வேளாண்மை பயிற்சியளிக்கும்
திறந்தவெளி பண்ணை. இயற்கை
வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார்
மண்ணுக்கேற்ற விவசாயம்: கம்பு, எள், கேழ்வரகு , கொள்ளு
உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக
மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை
உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்' என்றும் அவர் கூறினார்.. வீரிய மிக்க விதைகள், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி
பயன்பாட்டுக்கு எதிராகவும், இயற்கை
வழி வேளாண்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார் பசுமைப்
புரட்சி, நிலச்சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுக் கருத்துகளையும் இவர் முன் வைத்தார்.
.
புவி வெப்பமடைதல்:இதன்
பாதிப்புகளை குறைக்க இயற்கை வேளாண்மையை
பரவலாக்குவதன் மூலம் இப்பிரச்சினையின்
தீவிரத்தை குறைக்க முடியும் என்று
நிரூபித்து காட்டியவர்.
நீரின்
அவசியம்: நம் முன்னோர்கள் பிற்கால சந்ததியினர் வாழ வழி
செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் நீராதாரங்களை உருவாக்கி சென்றுள்ளதை சுட்டிக்காட்டி
நாமும் அவ்வாறு பிற்கால சந்ததியினரின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் எண்ணத்தில் திட்டங்களை தீட்டவேண்டும் என்ற விசாலமான பார்வை கொண்டவர்.
சமூக நோக்கு: “நிலம் நமது தாய், அது
விற்பனைக்கு அல்ல”என்றார்.
சாதி மறுப்பு,மதச்சார்பின்மை,சமூக சமத்துவம்
முதலிய முற்போக்கு கொள்கைகளை
கொண்டவர்.
காப்புரிமை : வேம்பு போன்றவற்றின்
காப்புரிமையை வெளிநாட்டு ஏகபோக நிறுவனம்
தமக்குரிய சொத்தாக திருடிக் கொண்டதை சிவா
அவர்களுடன் இணைந்து வழக்காடி
வேம்பு உரிமையை மீட்டுத்தந்தார்.
விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துதல்:ஒருங்கிணைந்த வேளாண்மை முறையில் ஆடு, மாடு, கோழி, மீன்வளர்ப்பு, காளான் வளர்ப்பு பணியிலும் ஈடுபட வேண்டும்என்றும்,
விவசாயிகள், வியாபாரிகளாகவும் இனி மாற வேண்டும்.என்றும்
அவர் கூறினார்.
மண்ணில்
விதிக்கப்படும் விதை விருட்சமாக வளர்ந்து
எல்லா
உயிர்களுக்கும் பயன்தரும்
இல்லையென்றால்
மண்ணுக்கு உரமாகும்-இது அவர் சொன்னது.
அவர் உயிர் இழந்து உடலால் மறைந்தாலும் விவசாயிகளையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க
அவர் தந்த
அறிவுரைகளாலும், தொலைநோக்குத்
திட்டங்களாலும் நம்மோடு என்றும் வாழ்வார்.
(தொகுப்புகள்-கண்டதும்,கேட்டதும்,படித்ததும்)
 |
கடலூரில் நம் உறுப்பினர்கள் அஞ்சலியில் கலந்துக்கொண்டனர். |