Translate

திங்கள், 17 டிசம்பர், 2012


மலர் 6

பென்ஷனர்  தினம்  17-12-2012


 
        கைப்பேசி 9442228182,9442292582,9486868999  


பென்ஷனர்  தினம் 16-12-2012


        கடலூரில் நமது மாவட்ட கிளையின் சார்பாக பென்ஷனர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் 16-12-2012 அன்று நமது உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  100 உறுப்பினர்கள் உற்சாகத்துடன்  கலந்து கொண்டனர்.
  
காலை 10.30  மணிக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் கூட்டம் துவங்கியது. உதவித் தலைவர் தோழர் ஜெயராமன் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று இதுகாறும் நமது மாவட்டக்கிளை ஆற்றியுள்ள பல செயல்களை விளக்கினார்.

அண்மையில் புதுச்சேரி அதாலத்தில் நமது இரு உறுப்பினர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்னைகள் தீர்க்கபட்டதை நினைவு கூர்ந்தார்.

       
அஞ்சலி:
மறைந்த நமது முன்னாள் பிரதமர் I.K.குஜ்ரால், கிதார் இசை மேதை ரவிசங்கர் ,மற்றும் அரசியல், தொழிற்சங்க சேவையில்,சமூக சேவையில்   ஈடுபட்டு   மறைந்த நமது தலைவர்களுக்கும் ,மறைந்த  நமது உறுப்பினர்கள் தோழர்கள் பெர்னாண்டஸ், J. ருக்குமணி அவர்களுக்கும் 2   நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி நமது மரியாதையை  தெரிவித்து கொண்டோம்.


மாவட்ட தலைவர் ரவீந்திரன் , மறைந்த D.S. நாக்ரா  என்ற மாமனிதர் 17-12—1982 ல் உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் கொண்ட அரசியலைமைப்பு பெஞ்சில் பென்ஷன் சீர்திருத்தங்களுக்காக போராடிப்பெற்ற வெற்றியினை நினைவு கூர்ந்தார். பென்ஷன் வாங்குகின்ற ஊழியர்கள் அனைவரும் அந்த ஒரு வெற்றியினால் தான் ஒரு நியாயமான , கௌரவமான நிலையை எட்டியிருக்கிறோம் என்றால் சற்றும் மிகையாது என்பதை நினைவில் இருத்தி நாம் எல்லோரும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை ஓய்வு பெற்றோர் அனைவரும் ஒன்று பட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் எடுத்து உரைத்தார்.
புதிய பென்ஷன் திட்டங்களின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் நினைவுறுத்தினார்.

ஒய்வு பெற்ற திரு V.சேகர் DGM Fin வாழ்த்தி பேசினார்.

    
ஒய்வு பெற்ற திரு வைத்திலிங்கம் D.E., புதுச்சேரி  அவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.


மாவட்ட செயலர் தோழர் K.வெங்கடரமணன் மதுரை மாநில மாநாடு,ஜெய்ப்பூர் அகில இந்திய மாநாட்டு முடிவுகளை ஒவ்வொன்றாக விளக்கி எடுத்து உரைத்தார். உறுப்பினர்கள் இறுதி காலத்தில் அளிக்கும் நமது குடும்ப நல நிதியை 1000 இலிருந்து    5000  ஆக மாற்ற வேண்டும் என்ற ஒரு சில உறுப்பினர்களின் கோரிக்கையை மன்றத்தில் கூறி, பின் மன்றத்தின் ஏகோபித்த முடிவுடன் அது 2000 ஆக மாற்ற பட்டதையும் , நமது பங்களிப்பு ஒவ்வொருவருக்கும் 50 இலிருந்து    100 ஆக வருடத்திற்கு மாற்ற பட்டதையும்  கூறினார்.
   

மாவட்ட தணிக்கையாளர் தோழர் சண்முகசுந்தரம் ஒய்வு பெற்ற CAO Fin  நமது உறுப்பினர்களுக்கு கீழ் கண்ட சில அறிவுரைகள் வழங்கினார்.

1.        உங்கள் பென்ஷன் சேமிப்பு கணக்கினை உங்கள் மனைவி பெயரோடு சேர்த்துக்  கொள்ளுங்கள். (JOINT A/c)
2.        உங்கள் பென்ஷன் புத்தகத்தில் (PPO) எல்லா தகவல்களும் சரியாக இருக்கிறதா பார்த்துக் கொள்ளுங்கள்.இல்லையானால் உடனே விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளுங்கள்.
3.        மெடிகல் கார்டை விண்ணப்பித்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
     4.        அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலையங்களை எழுதி வைத்துக் கொள்ளவும் . தேவை படும்போது அதில் ஏதாவது ஒன்றில் அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு சேர்ந்து சிகிச்சை பெற்றுகொள்ளவும்.
5.        ஒவ்வொரு வருடமும் நவம்பரில் ஆயுள் சர்டிபிகட் ஒரு அதிகாரியின் கையொப்பத்துடன் அளிக்கவும்.
6.        அலுவலகத்தில் இருந்து அடையாள அட்டை PPO எண் உடன் வங்கி வைத்துக்கொள்ளவும்.இது பல சமயங்களில் தேவைப்படும்.
7.        பென்ஷன் வாங்க செல்லும்போது உங்கள் துணைவியையும் கூட அழைத்து செல்லவும்.இது எப்போதாவது உங்களுக்கு உதவும்.
8.        எல்லா முக்கிய கோப்புக்களையும் கட்டாயம் ஓரிடத்தில் எல்லோருக்கும் தெரிந்தவாறு வைத்துக் கொள்ளவும்.இல்லாவிடில் அவசரகாலங்களில் தேடும்போது விலை மதிப்பு மிக்க நேரங்களை இழப்பீர்கள்.
9.        எதுவானாலும் துணையோடு விவாதியுங்கள்.பயிற்சி கொடுங்கள்.



தோழர் ஜெயகுமார் சிதம்பரம் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்.

பண்ருட்டி தோழர் தியாகராஜன் உறுப்பினர்கள் உனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

மூத்த உறுப்பினர் தோழர் கடல் நாகராஜன் (நிறுவனர் பாரதிதாசன் நற்பணி மன்றம்) எல்லா நண்பர்களையும் ஒரு சேர பார்ப்பதில் மகிழ்ச்சியை தெரிவித்து வாழ்த்து கூறினார்.

உதவி தலைவர் தோழர் துரைசாமி அவர்கள் நமது ஓய்வூதியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பெருமை சேர்க்க வேண்டும் என கூறி வாழ்த்தினார்.

தோழர் S. கோவிந்தராஜ் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.இவருடைய துணைவியார் சமீபத்தில் நமது ஆயுள் உறுப்பினராகி உள்ளார். நம் இயக்கத்தில் நம்பிக்கை வைத்துள்ள அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்.


மூத்தத்தோழர் G. வெங்கடாசலம் போஸ்டல் சங்கத்தில் பெரும் பொறுப்புக்களை சிறப்பாக பரிணமிக்க செய்தவர்.வயதான காலத்தில் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்கள் வீட்டில் கூறிய போதும் கட்டாயம் வருவேன் என்று நம்மை வாழ்த்திய அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.இவரை போன்றோர் நமது மாவட்டத்தில் இருப்பது நமக்கு பெருமையும்,பலமும்  சேர்க்கின்றது.

நமது காலஞ்சென்ற தோழர் ஜெயப்ரகாஷ் இன் துணைவியார் திருமதி மீனா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.இவருக்கு குடும்ப ஓய்வூதியம் நிலுவையில் இருக்கின்றது.

நமது கவுரவ தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் கூட்டம் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை நம்முடன் இருந்து  இந்த விழா இனிது நடை பெற நமக்கு உறுதுணை புரிந்தார்.FDI எதிர்ப்பு,வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர கம்பனிகளால் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் , DYF இளைஜர்களின் நடைப்பயணம் , தமிழகத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களின் லாப நோக்கு போன்ற பல கோணங்களில் வலம் வந்து ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றினார்.
திருமதி விஜயலட்சுமி  பாலகிருஷ்ணன் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளார்.அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே நமது கூட்டத்திற்கு வந்து சிறப்புரை வழங்கி நமது சங்கத்தில் இணைய உள்ளதையும் அறிவித்தது நமது உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.


நமது மாவட்டத்தின் முன்னணி தோழர் திருஞானம் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.கரத்தாலும்,கருத்தாலும் உழைக்கின்ற உத்தமர்.சிறந்த பல சேவைகளை செய்து துறையில் விருது பெற்றவர்.புன்னகை பூக்கும் தெளிவான முகம் கொண்டவர்.இந்த விழா மண்டபத்தை ஏற்பாடு செய்து,மதிய சுவையான உணவுக்கும் ஏற்பாடு செய்து, காலையிலிருந்து மாலை வரை எல்லோரும் திரும்பும் வரை தனது விருந்தோம்பலையும் தோழமையையும் காட்டிய இவர் இறுதியாக நன்றி கூறி நிறைவு செய்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக