Translate

திங்கள், 17 டிசம்பர், 2012


மலர் 6

பென்ஷனர்  தினம்  17-12-2012


 
        கைப்பேசி 9442228182,9442292582,9486868999  


பென்ஷனர்  தினம் 16-12-2012


        கடலூரில் நமது மாவட்ட கிளையின் சார்பாக பென்ஷனர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் 16-12-2012 அன்று நமது உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  100 உறுப்பினர்கள் உற்சாகத்துடன்  கலந்து கொண்டனர்.
  
காலை 10.30  மணிக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் கூட்டம் துவங்கியது. உதவித் தலைவர் தோழர் ஜெயராமன் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று இதுகாறும் நமது மாவட்டக்கிளை ஆற்றியுள்ள பல செயல்களை விளக்கினார்.

அண்மையில் புதுச்சேரி அதாலத்தில் நமது இரு உறுப்பினர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்னைகள் தீர்க்கபட்டதை நினைவு கூர்ந்தார்.

       
அஞ்சலி:
மறைந்த நமது முன்னாள் பிரதமர் I.K.குஜ்ரால், கிதார் இசை மேதை ரவிசங்கர் ,மற்றும் அரசியல், தொழிற்சங்க சேவையில்,சமூக சேவையில்   ஈடுபட்டு   மறைந்த நமது தலைவர்களுக்கும் ,மறைந்த  நமது உறுப்பினர்கள் தோழர்கள் பெர்னாண்டஸ், J. ருக்குமணி அவர்களுக்கும் 2   நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி நமது மரியாதையை  தெரிவித்து கொண்டோம்.


மாவட்ட தலைவர் ரவீந்திரன் , மறைந்த D.S. நாக்ரா  என்ற மாமனிதர் 17-12—1982 ல் உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் கொண்ட அரசியலைமைப்பு பெஞ்சில் பென்ஷன் சீர்திருத்தங்களுக்காக போராடிப்பெற்ற வெற்றியினை நினைவு கூர்ந்தார். பென்ஷன் வாங்குகின்ற ஊழியர்கள் அனைவரும் அந்த ஒரு வெற்றியினால் தான் ஒரு நியாயமான , கௌரவமான நிலையை எட்டியிருக்கிறோம் என்றால் சற்றும் மிகையாது என்பதை நினைவில் இருத்தி நாம் எல்லோரும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை ஓய்வு பெற்றோர் அனைவரும் ஒன்று பட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் எடுத்து உரைத்தார்.
புதிய பென்ஷன் திட்டங்களின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் நினைவுறுத்தினார்.

ஒய்வு பெற்ற திரு V.சேகர் DGM Fin வாழ்த்தி பேசினார்.

    
ஒய்வு பெற்ற திரு வைத்திலிங்கம் D.E., புதுச்சேரி  அவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.


மாவட்ட செயலர் தோழர் K.வெங்கடரமணன் மதுரை மாநில மாநாடு,ஜெய்ப்பூர் அகில இந்திய மாநாட்டு முடிவுகளை ஒவ்வொன்றாக விளக்கி எடுத்து உரைத்தார். உறுப்பினர்கள் இறுதி காலத்தில் அளிக்கும் நமது குடும்ப நல நிதியை 1000 இலிருந்து    5000  ஆக மாற்ற வேண்டும் என்ற ஒரு சில உறுப்பினர்களின் கோரிக்கையை மன்றத்தில் கூறி, பின் மன்றத்தின் ஏகோபித்த முடிவுடன் அது 2000 ஆக மாற்ற பட்டதையும் , நமது பங்களிப்பு ஒவ்வொருவருக்கும் 50 இலிருந்து    100 ஆக வருடத்திற்கு மாற்ற பட்டதையும்  கூறினார்.
   

மாவட்ட தணிக்கையாளர் தோழர் சண்முகசுந்தரம் ஒய்வு பெற்ற CAO Fin  நமது உறுப்பினர்களுக்கு கீழ் கண்ட சில அறிவுரைகள் வழங்கினார்.

1.        உங்கள் பென்ஷன் சேமிப்பு கணக்கினை உங்கள் மனைவி பெயரோடு சேர்த்துக்  கொள்ளுங்கள். (JOINT A/c)
2.        உங்கள் பென்ஷன் புத்தகத்தில் (PPO) எல்லா தகவல்களும் சரியாக இருக்கிறதா பார்த்துக் கொள்ளுங்கள்.இல்லையானால் உடனே விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளுங்கள்.
3.        மெடிகல் கார்டை விண்ணப்பித்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
     4.        அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலையங்களை எழுதி வைத்துக் கொள்ளவும் . தேவை படும்போது அதில் ஏதாவது ஒன்றில் அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு சேர்ந்து சிகிச்சை பெற்றுகொள்ளவும்.
5.        ஒவ்வொரு வருடமும் நவம்பரில் ஆயுள் சர்டிபிகட் ஒரு அதிகாரியின் கையொப்பத்துடன் அளிக்கவும்.
6.        அலுவலகத்தில் இருந்து அடையாள அட்டை PPO எண் உடன் வங்கி வைத்துக்கொள்ளவும்.இது பல சமயங்களில் தேவைப்படும்.
7.        பென்ஷன் வாங்க செல்லும்போது உங்கள் துணைவியையும் கூட அழைத்து செல்லவும்.இது எப்போதாவது உங்களுக்கு உதவும்.
8.        எல்லா முக்கிய கோப்புக்களையும் கட்டாயம் ஓரிடத்தில் எல்லோருக்கும் தெரிந்தவாறு வைத்துக் கொள்ளவும்.இல்லாவிடில் அவசரகாலங்களில் தேடும்போது விலை மதிப்பு மிக்க நேரங்களை இழப்பீர்கள்.
9.        எதுவானாலும் துணையோடு விவாதியுங்கள்.பயிற்சி கொடுங்கள்.



தோழர் ஜெயகுமார் சிதம்பரம் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்.

பண்ருட்டி தோழர் தியாகராஜன் உறுப்பினர்கள் உனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

மூத்த உறுப்பினர் தோழர் கடல் நாகராஜன் (நிறுவனர் பாரதிதாசன் நற்பணி மன்றம்) எல்லா நண்பர்களையும் ஒரு சேர பார்ப்பதில் மகிழ்ச்சியை தெரிவித்து வாழ்த்து கூறினார்.

உதவி தலைவர் தோழர் துரைசாமி அவர்கள் நமது ஓய்வூதியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பெருமை சேர்க்க வேண்டும் என கூறி வாழ்த்தினார்.

தோழர் S. கோவிந்தராஜ் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.இவருடைய துணைவியார் சமீபத்தில் நமது ஆயுள் உறுப்பினராகி உள்ளார். நம் இயக்கத்தில் நம்பிக்கை வைத்துள்ள அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்.


மூத்தத்தோழர் G. வெங்கடாசலம் போஸ்டல் சங்கத்தில் பெரும் பொறுப்புக்களை சிறப்பாக பரிணமிக்க செய்தவர்.வயதான காலத்தில் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்கள் வீட்டில் கூறிய போதும் கட்டாயம் வருவேன் என்று நம்மை வாழ்த்திய அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.இவரை போன்றோர் நமது மாவட்டத்தில் இருப்பது நமக்கு பெருமையும்,பலமும்  சேர்க்கின்றது.

நமது காலஞ்சென்ற தோழர் ஜெயப்ரகாஷ் இன் துணைவியார் திருமதி மீனா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.இவருக்கு குடும்ப ஓய்வூதியம் நிலுவையில் இருக்கின்றது.

நமது கவுரவ தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் கூட்டம் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை நம்முடன் இருந்து  இந்த விழா இனிது நடை பெற நமக்கு உறுதுணை புரிந்தார்.FDI எதிர்ப்பு,வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர கம்பனிகளால் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் , DYF இளைஜர்களின் நடைப்பயணம் , தமிழகத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களின் லாப நோக்கு போன்ற பல கோணங்களில் வலம் வந்து ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றினார்.
திருமதி விஜயலட்சுமி  பாலகிருஷ்ணன் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளார்.அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே நமது கூட்டத்திற்கு வந்து சிறப்புரை வழங்கி நமது சங்கத்தில் இணைய உள்ளதையும் அறிவித்தது நமது உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.


நமது மாவட்டத்தின் முன்னணி தோழர் திருஞானம் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.கரத்தாலும்,கருத்தாலும் உழைக்கின்ற உத்தமர்.சிறந்த பல சேவைகளை செய்து துறையில் விருது பெற்றவர்.புன்னகை பூக்கும் தெளிவான முகம் கொண்டவர்.இந்த விழா மண்டபத்தை ஏற்பாடு செய்து,மதிய சுவையான உணவுக்கும் ஏற்பாடு செய்து, காலையிலிருந்து மாலை வரை எல்லோரும் திரும்பும் வரை தனது விருந்தோம்பலையும் தோழமையையும் காட்டிய இவர் இறுதியாக நன்றி கூறி நிறைவு செய்தார்.







                                                                   மலர் 5

புதுச்சேரியில் நமது அகில இந்திய செயலர் உரை
30-11-2012


கைப்பேசி 9442228182,9442292582,9486868999  



புதுச்சேரியில்     30-11-2012      அன்று பென்ஷன் அதாலத் நடைபெறுவதை ஒட்டி புதுவை மாவட்டச் சங்கம்     புதுச்சேரி தமிழ் சங்கத்தில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
   
அந்த சிறப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் ஜானகிராமன் தலைமையில்,மாநில சங்க நிர்வாகி தோழர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம் அனைவரையும் வரவேற்றார்.   புதுச்சேரியின் முன்னணி தோழர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.கடலூர் கிளையின் சார்பாக நமது கிளையின் தலைவர்,செயலர்,உதவிச்செயலர் முதலாக 14  தோழர்கள் கலந்து கொண்டனர்.


மாநில பொருளாளர் தோழர் கவுஸ் பாஷா,மாநில செயலர் தோழர் ராமராவ்,,மாநில தலைவர் தோழர் முத்தியாலு,அகில இந்திய பொதுச் செயலர் தோழர் நடராசன், அகில இந்திய துணைத் தலைவர்  தோழர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கடலூர் கிளையின் சார்பாக   நாம் சால்வை அணிவித்து கவுரவித்தோம்.

             பென்ஷன் அனாமலி, 78.2  பஞ்ச படி இணைப்பு, வவுச்சர் இல்லாமல் மெடிகல் அலவன்ஸ், ஆகிய தற்போதைய நிலைமை பற்றியும், அகில இந்திய மாநாட்டு தீர்மானங்களை பற்றியும், மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் புதிய அரசு கொள்கைகளை பற்றியும் தலைவர்கள் விளக்கினர்.        
          

அகில இந்திய பொதுச் செயலர் தோழர் நடராசன் பொறுப்பு ஏற்ற பிறகு முதன்முதலாக சென்னை நீங்கலாக தமிழகத்தில்புதுச்சேரியில் சிறப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டுசிறப்பித்தது   நமது தோழர்களுக்கு மனநிறைவாக இருந்தது.

இந்த கூட்டத்தில் அன்று ஒய்வு பெற்ற தோழர் உட்பட நமது அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்த 7 உறுப்பினர்களுக்கும் நமது பொது செயலர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மலர் 4

சிதம்பரத்தில்  நமது  பொதுக்குழுக் கூட்டம் 

கைப்பேசி 9442228182,9442292582,9486868999  



23-6-2012  அன்று  சிதம்பரம் பகுதி தோழர்களை  அவர்கள் ஊரிலேயே  சந்திக்கும்  முகத்தான்  நாம்  திட்டமிட்ட படியே   இந்த கூட்டம்   சிதம்பரம்  ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ்  திருமண மண்டபத்தில்  நண்பகல் உணவுக்குப் பின்  110 தோழர்களுடன்  கூட்டம் சிறப்பாக நடந்தது.தோழர் A. ஜெயக்குமார் வரவேற்புக் குழு தலைவர்  அவர்கள் தலைமையில் தோழர்கள் வெங்கடாசலம் ,தனபாலன்,சுதாகர்,தக்ஷிணாமூர்த்தி, இவர்களைக் கொண்ட வரவேற்புக் குழு சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தது எல்லோருக்கும் மனநிறைவாக இருந்தது.மாவட்ட தலைவர் தோழர் K.ரவீந்திரன் தலைமை உரையாற்ற,  தோழர்  A.ஜெயக்குமார் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.மாவட்ட  செயலர் தோழர் K.வெங்கடரமணன் சங்க செயல்பாடுகளை  விவரித்துப் பேசினார்.
முன்னணி தோழர்கள் Pசாமிக்கண்ணு,Kஇளங்கோவன் ,.K.சம்சுதீன், Aசேஷு,. S.பாபுசெட்டியார் ,நடராசன் முதலியோரும்,மற்றும் நமது உறுப்பினர்களும் பெருவாரியாக கலந்து சிறப்பித்தனர்.
மாநில  தலைவர் தோழர்   D.கோபாலககிருஷ்ணன்,  சங்க செயல்பாடுகளை  விவரித்து நாம் ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை  சுட்டிக் காட்டினார். நாம்  சமூக பிரக்ஜையுடன்   செயலாற்ற வேண்டியதின் அவசியத்தை தெரிவித்தார்.பெட்ரோல் விலை    ஏற்றம்,நீர் நிர்வாகம் போன்ற நம்மை பாதிக்கின்ற செய்திகளை   கூறினார்.கடலூர் கிளை முதல் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தியதையும் நினைவு  கூர்ந்தார்.    

தோழர் பால்கி  சிறப்புரை ஆற்றினார்.தோழர்  திருஞானம் நம்முடைய செயல்பாடுகளை விளக்கி பேசினார்.














புதன், 12 டிசம்பர், 2012




திண்டிவனத்தில்  நமது  பொதுக்குழுக் கூட்டம் 

கைப்பேசி 9442228182,9442292582,9486868999  




மாவட்ட  தலைநகரிலேயே  நடக்கும்  கூட்டங்களை  தோழர்களை  அவர்கள் ஊரிலேயே  சந்திக்கும்  முகத்தான்  நாம்  திட்டமிட்ட படியே   இந்த கூட்டம்  21-4-2012  அன்று திண்டிவனம் ராஜ் மஹால் திருமண மண்டபத்தில்  நண்பகல் உணவுக்குப் பின்  104 தோழர்களுடன்  கூட்டம் சிறப்பாக நடந்தது.மாவட்ட உதவி தலைவர் தோழர் S.துரைசாமி அவர்கள் தலைமையில் தோழர்கள் D.தளபதி தொல்காப்பியன்  ,S.நாராயணசாமி,M. வடிவழகன் இவர்களைக் கொண்ட வரவேற்புக் குழு சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தது எல்லோருக்கும் மனநிறைவாக இருந்தது.மாவட்ட தலைவர் தோழர் K.ரவீந்திரன் தலைமை உரையாற்ற, தோழர் S.துரைசாமி  வரவேற்பு உரை நிகழ்த்தினார்.மாவட்ட  செயலர் தோழர் K.வெங்கடரமணன் சங்க செயல்பாடுகளை  விவரித்துப் பேசினார்.
அகில இந்திய தலைவர் தோழர்   K.முத்தியாலு,  மாநிலச் செயலர் தோழர் V.ராமராவ் , மாநில பொருளர்  தோழர்  S.கவுஸ் பாஷா ஆகியோர்  சங்க செயல்பாடுகளை  விவரித்து நாம் ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டும் என்றுக் கூறினர்.

நமது நன்கொடை பகுதிப்பணம் மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது மாவட்டச் சங்கதத்தின் சார்பாக அளிக்கப்பட்டது.


























31-3-2012 இல் ஒய்வு பெற்ற நமது K.இளங்கோவன் அவர்கள் நம்மகத்தே ஆயுள் உறுப்பினராகவும், நமது பத்திரிக்கையின் ஆயுள் சந்தா  உறுப்பினராகவும், சேர்ந்து இந்த கூட்டத்தில்  கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.அவருக்கு  மாவட்ட உதவி தலைவர் தோழர் S.துரைசாமி அவர்கள் பொன்னாடைப் போற்றிக் கவுரவித்தார்.



தோழர்கள் P.இளங்கோவன்,V.பார்த்தசாரதி  அவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.




மூத்த தோழர்கள் K.நீலகண்டன் ,சுப்பு   அவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.



 அரங்கம்




தோழர் N.T  அவர்கள் மருத்துவ  அலவன்சை பழைய முறையிலேயே நிர்வாகம் வழங்கிட வேண்டும் என்று கூறினார்.


சனி, 1 டிசம்பர், 2012


மலர்-2


முதல் தமிழ் மாநில BSNL ஒய்வு பெற்றோர் நலச்சங்க  மாநாடு
 கடலூர்  8-7-2007


         கைப்பேசி 9442228182,9442292582,9486868999   Email-aibsnlpwacuddalore@gmail.com     

          நமது முதல் தமிழ் மாநில BSNL ஒய்வு பெற்றோர் நலச்சங்க  மாநாடு    8-7-2007 அன்று செங்குந்தர் திருமணமண்டபம்,திருப்பாபுலியூர், கடலூரில்,நடந்தது. தமிழகமெங்குமிருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் மூத்ததோழர்கள் கலந்துக்கொண்டனர்.தோழர் M.மருதவாணன்(கடலூர் நகர குடியிருப்போர் நலச்சங்கம்) வரவேற்பு குழு தலைவராகவும்,தோழர்,K.வெங்கடரமணன் கடலூர் வரவேற்பு குழு பொதுச்செயலராகவும், . தோழர் P.ஜெயராமன்  பொருளராகவும் இணைந்து கடலூர் மாநில,மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்படுடன் BSNL அனைத்துச் சங்க பிரதிநிதி கள் ஒத்துழைப்புடன் ,வெற்றிகரமாக நடத்தியது..

   காலை 1௦ மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு இனிதே தொடங்கியது.தேசிய கொடியை S.அப்துல் காதர் மாவட்ட தலைவர் அவர்களும்,சங்க கொடியை தோழர் D.கோபாலகிருஷ்ணன் மாநில தலைவர் அவர்களும் ஏற்றினர். தோழர் D.கோபாலகிருஷ்ணன் மாநில தலைவர் TBPWA தலைமைத்தாங்கி கூட்டத்தை நடத்தினார். .மாநாட்டு விளக்கவுரை தோழர் V.ராமாராவ் பொதுச்செயலர் TBPWA எடுத்துரைத்தார்.
      
      தோழர்  P.S. ராமன்குட்டி கேரள மாநிலச்செயலர் ஓய்வூதியர் நலச்சங்கம் வர்கள் நமது சங்க அமைப்பு ன் தேவை என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தெளிவாக எடுத்து உரைத்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
     
     திரு G. அழகர்சாமி (PCCA TN ) அவர்கள் நமக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து நமது நிலுவைகளை எல்லாம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்பதை எடுத்துரைத்து நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும். உறுதியளித்தார். 
     
     தோழர் N.பாலகிருஷ்ணன் SDESNEA மாநிலச்செயலர் அவர்களும், தோழர்                 R.பட்டாபிராமன்  NFTE மாநிலச்செயலர் அவர்களும்,தோழர் S.நடராஜன் மாநிலச்செயலர் ஓய்வூதியர் நலச்சங்கம் சென்னை தொலைபேசி  அவர்களும் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக K. ரவீந்திரன் DGM A&P அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

     மற்றும் கீழ்க்கண்ட நமது தோழமை சங்கத்தலைவர்களும், நிர்வாகிகளும், நமது சங்க பொறுப்பாளர்களும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று,தங்கள் உடல் உழைப்பினை  நல்கி, மாநாட்டினை வாழ்த்தி,மாநாடு வெற்றிப்பெற காரணமாக இருந்தார்கள். 

தோழர் R.அசோகன்  தலைவர் SNEA
தோழர் S.கனகசொருபன் மூத்த தொழிற்சங்க தலைவர்
தோழர்.D.புருஷோத்தமன் (த.அ.ஓ.ச)
தோழர் K.சுகுமாரன் (LIC)
தோழர் ஜெயபால் FNTO 
தோழர் P.வெங்கடேசன் (AIBSNLEA)
தோழர் வெங்கடாசலம் அஞ்சல் ஓய்வூதியர் நலச்சங்கம்
தோழர் I.M.மதியழகன் மாவட்டச்செயலர்,BSNLEU
தோழர் R.பாலசுப்ரமணியன்  TNGEA
தோழர் மணவாளன்  (LICEU)
தோழர் K.இளங்கோவன் BSNL SDE PRO
தோழர் S.முத்துகுமாரசாமி  BSNLEU
தோழர் P.வெங்கடேசன் SNEA BSNL
தோழர் A.அண்ணாமலை  BSNLEU
தோழர் S.வெற்றிவேல்  AIBCTES
தோழர் R.திருநாவுக்கரசு BSNL
தோழர் N.திருஞானம் BSNLEU
தோழர் N. வீரபாண்டியன்  AIJTOA  
தோழர் S.கேப்ரியேல் கடலூர்
தோழர் பிச்சுமணி, தலைவர் BSNLஓய்வூதியர் நலச்சங்கம் புதுவை 
தோழர் பாலகிருஷ்ணன்,   BSNLஓய்வூதியர் நலச்சங்கம் புதுவை 

  பிரதிநிதிகள் மாநாடு மாலை 2.30 மணிக்கு நடந்தது. சங்க அமைப்பு சட்டம்,விவாதங்கள்,நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   
      தோழர் C.K. நரசிம்மன்  பொருளாளர்,TBPWA  நன்றியுரை தெரிவித்தார்.
    
      மாலையில்நடந்தகருத்தரங்கத்திற்குதோழர்,K.வெங்கடரமணன் கடலூர் 
வரவேற்பு குழு பொதுச்செயலர், தலைமை ஏற்று நடத்தினார்.புதிய ஒய்வஊதிய திட்டம் யாருக்காக ? என்ற தலைப்பில் தோழர் கோபாலகிருஷ்ணன் மாநில தலைவர் TBPWA அவர்களும், தோழர் கங்காதரன்  மாநில தலைவர் TNGREA , தனியார்மயம் சமூகத் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும்  சொற்பொழிவாற்றி நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
    
      தோழர் P.ஜெயராமன்  பொருளர்,வரவேற்புக்குழு,  மகிழ்ச்சி பொங்கநன்றிக் கூறி வெற்றியுடன்  நிகழ்ச்சியை நிறைவு செய்தார்..

       

       வயது ஒரு தடையல்ல
                நிச்சயம் நம்மால் முடியும்
       ஏனெனில் நாம்தான்
            நம்பிக்கையை விதிப்பவர்களும்
       நம்பிக்கையை வளர்ப்பவர்க்களுமான
            புதிய விடியலின்
            உழைப்பாளிகள் .

                                ..என்ற வாழ்த்ததினை தெரிவித்த  SNEA  கடலூருக்கு நன்றி


மாநாட்டு புகைப்படங்கள்