Translate

சனி, 30 ஜூன், 2018


30.6.2018  அன்று பணி ஓய்வு பெற்றதோழர்கள்




























பணி ஓய்வு பெற்றதோழர்கள் நீள் ஆயுளும் 
 நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கவளமுடன்  பல்லாண்டுகள் என நாம் 
வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்

சனி, 23 ஜூன், 2018

அகிலஇந்திய bsnl ஓய்வூதியர் நலச்சங்கம் அறைகூவலுக்கிணங்க கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டம்



















20-6-2018 அன்று மாலை 5 மணிக்கு  மத்தியச்சங்க  அறைகூவலுக்கு இணங்க கடலூர் BSNL பொது மேலாளர் அலுவலக கட்டிடத்திற்கு முன்பாக கடலூர்  BSNL  மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும்  அனைத்து  ஓய்வூதியர்களும் பேரெழுச்சியுடன் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
           ஆர்பாட்டத்தை நமது கடலூர் மாவட்டத்தின்  தலைவர் தோழர் P.ஜெயராமன் தொடங்கி வைத்து ஏன் இந்த ஆர்பாட்டம் என்ற செய்தியினை முன்குறிப்பாக எடுத்துரைத்தார்.
         நமது மாவட்டச்செயலர்  தோழர்  அசோகன் அவர்கள் ஆர்பாட்டத்தின் காரணிகளையும் ,நமது  நோக்கங்களையும்,நிகழ்கால நிகழ்வுகளையும்  விளக்கி பேசினார்.
         தோழர்கள் K.வெங்கடரமணன் கடலூர்,நாராயணசாமி திண்டிவனம்,சந்திரசேகர்  கடலூர்  கோரிக்கை முழக்கங்களை தொடர்ச்சியாக முழக்க நமது உறுப்பினர்களும் தொடர்ந்தனர்.
          மாநிலச் சங்கத்தின் சார்பாக தோழர்கள்  ரவீந்திரன்  மாநில து.த.,அன்பழகன்   மாநில து.செ.அவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
          அன்பழகன்   மாநில து .செயலர். நிகழ்வுகளை தொடர்ச்சியாக விளக்கி பேசினார்.
               கடலூர் BSNL மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும்  100 தோழர்கள்,தோழியர்களும் கலந்துக்கொண்டனர்.
நமது தலைவர்களின் சென்னை உரையினை கேட்க 
கீழே கடைசியாக உள்ள  நீல வாக்கியத்தில் கிளிக் செய்யவும்.












































நமது தலைவர்களின் சென்னை உரையினை கேட்க 
கீழேயுள்ள நீல வாக்கியத்தில் கிளிக் செய்யவும்.

மாநிலத்தலைவர் அவர்களின் உரை

மாநிலச்செயலர் உரை

அகில இந்தியச்செயலரின் உரை

தோழர் DG அவர்களின் உரை

தோழர் சுகுமாரன் அவர்களின் உரை

வெள்ளி, 22 ஜூன், 2018

கடலூர்  AIBSNLPWA  மாவட்டத்தின்   ஜூன்  மாதாந்திர கூட்டங்கள்
சிதம்பரம்






வெள்ளி, 15 ஜூன், 2018









































உன்னதமான ரமலான் மாதத்தில் உலகமெல்லாம் வாழ்கின்ற  

 இஸ்லாமியப் பெருமக்கள்

30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து

புலன்களை, இச்சைகளைக் கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் 

நிறைவில்

விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திரு நாளான ரமலான் ஈது 

பெருநாளில்

அண்ணல் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை 

நெறிகளைப் பின்பற்றி

விருந்தோம்பி,உயர்ந்த பண்போடு, மனிதநேய அன்பு காட்டி

இத்திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரசகோதரிகள் 

அனைவருக்கும்


எங்களது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் 

கொள்கிறோம்.