Translate

திங்கள், 11 ஜூலை, 2016

கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழுகூட்டமும்,
78.2 % IDA வெற்றிவிழா கூட்டமும்

9-7-2016 அன்று கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழுகூட்டமும்,
78.2 % IDA வெற்றிவிழா கூட்டமும் தோழர் K.இளங்கோவன் அவர்களின் தலைமையில்  மா வட்டத்தின் அனைத்து பகுதிகளின் 100 உறுப்பினர்களின்  பங்கேற் புடன் வெகு சிறப்பாக நடந்தது.

13-6-2016 அன்று AIBSNLPWA கடலூர்   5 வது மாவட்ட மாநாட்டில்
 சிறப்பாக பணி செய்தவர்களுக்கும்,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டது.

மதிய உணவும், 78.2 % IDA வெற்றிவிழாவிற்கான 3 இனிப்புகளும் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

தோழர் P.ஜெயராமன் 78.2 % IDA -இன் தோற்றமும்,தற்போதைய வெற்றி,நிலுவை தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதைப்பற்றி பேசினார்.

செயலர் தோழர் N.திருஞானம் நிதி நிலைமை பற்றியும்,தற்போது 500 ஆயுட்கால உறுப்பினர்களை தாண்டி பீடு நடை போட்டுக்கொண்டு வளர்ந்து வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.























வெள்ளி, 8 ஜூலை, 2016

எனக்கு வந்த பாராட்டுக்களையும்,புகழுரைகளையும்  AIBSNLPWA  களப்பணியாளர்கள் சார்பாக பெற்று அவர்களுக்கே உரித்தாக்குகின்றேன் ....தோழர்  PS .ராமன்குட்டி


5-7-2016 அன்று பிரதமமந்திரி மாண்புமிகு திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த  அமைச்சரவை கூட்டத்தி ல் 78.2 %  IDA 10-6-2013 க்கு முன்பாக ஓய்வுபெற்ற அனைத்து BSNL  ஓய்வூதியர்கள்கள் /அல்லது ,அவர்களின் வாரிசுகளுக்கும்  சேவையில் உள்ள BSNL  ஊழியர்களுக்கு இணையான IDA  வை அளித்திட ஆணை வெளியிட்டுள்ளது.

BSNL ஓய்வூதியர்களும் , குடும்ப ஓய்வூதியர்களும் ஆக மொத்தம்    1,18,500 பயனாளிகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

BSNL ஓய்வூதியர்களுக்கு ரூ 129.63 கோடியும் ,குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ 24.93 கோடியும் ஒவ்வொரு வருடமும் அரசாங்கம்  செலவழிக்கும்.
நிலுவைத்தொகை ரூ 239.92 +44.62 கோடியும் கொடுக்க இருக்கிறது.

விதி FR  116 ன்  கீழ் பணியில் உள்ள  BSNL ஊழியர்களுக்கு  ஓய்வூதியத்துக்கான    பங்களிப்பினை அளிக்கவேண்டும்.

10 ஆண்டுகளாக  நம்மை  மிரட்டி கொண்டு இருந்த விதி 37 A  இன்  60%:40%  அறவே  நீக்கப்பட்டுள்ள து.

நமக்கு ஓய்வூதியம் முழுக்க அரசாங்கத்தில் இருந்து அளிக்கப்படுவது  உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால்  BSNL இன்  நிதி ஆதாரம் நமக்கு தடையாக இருக்காது.







வியாழன், 7 ஜூலை, 2016

நோன்பு பெருநாள்


உன்னதமான ரமலான் மாதத்தில் உலகமெல்லாம் வாழ்கின்ற  

 இஸ்லாமியப் பெருமக்கள்

30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து

புலன்களை, இச்சைகளைக் கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் 

நிறைவில்

விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திரு நாளான ரமலான் ஈது 

பெருநாளில்

அண்ணல் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை 

நெறிகளைப் பின்பற்றி

விருந்தோம்பி,உயர்ந்த பண்போடு, மனிதநேய அன்பு காட்டி

இத்திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரசகோதரிகள் 

அனைவருக்கும்


எங்களது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் 

கொள்கிறோம்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

30-6-2016 அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்


துணை பொதுமேலாளர் CM திருமதி ஜெயந்தி அபர்ணா அவர்கள் 

 தலைமையில்  திருமதி D.கலைவாணி   AGM  நிர்வாகம்  தொகுத்து

வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது.


  பணிகுறிப்புகள்














BSNL நிர்வாகம்,தொழிற்சங்கங்கள்  சார்பாக  ஓய்வுபெற்றவர்களின்  பணிகுறிப்புகள் படிக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நமது மாவட்டச் சங்கத்தின் சார்பாக பொன்னாடை ஓய்வுபெற்ற அனைவருக்கும் போர்த்தி கௌரவிக்கப்பட்டு,கடலூர் கதிரும், ஓய்வுபெற்றவர்களின்  தொலைபேசி டைரக்டரியும் அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.















நமது சார்பாக தோழர் P.ஜெயராமன் ஓய்வுபெற்ற அனைவரையும் 

வாழ்த்திப் பேசினார்.

SDE R.சங்கரின் அம்மா தனது 85 வயதில் மகனின் பணிநிறைவு விழாவிற்கு வந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.நமது சார்பாக பொன்னாடை அணிவித்து அவரை கௌரவித்தோம்.


ஓய்வுபெற்ற அனைவரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி பிரியாவிடைப் பெற்றனர்.














ஓய்வுப் பெற்ற இவர்கள் நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றோம்.