Translate

புதன், 18 ஜூன், 2014

விழுப்புரம் பகுதி மாதாந்திரக் கூட்டம்  5-6-2014

5-6-2014 அன்று விழுப்புரம் தொலைபேசி வளாகத்தில் திரு சண்முகசுந்தரம் தலைமையில் மாதாந்திரக்கூட்டம் சிறப்பாக நடந்தது.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் சந்திரமோகன்,வெங்கடரமணன்,திருஞானம்,ஜெயராமன்  இவர்களுக்கு  பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. தோழர் துரைபாபு கன்வீனர் வரவேற்புரை நிகழ்த்தினார்..50 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.திரு ராமச்சந்திரன் DE கலந்துக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். சமிபத்தில் பணி ஓய்வுபெற்ற திரு ராதாகிருஷ்ணன் DGM நமது சங்க உறுப்பினராக சிறப்புரை ஆற்றினார்.இந்த கூட்டத்தின் செலவுகளை இந்தமாதம் ஓய்வுப் பெற்ற விழுப்புரம் தோழர்கள் பகிர்ந்துக்கொண்டனர்.தோழர் வெற்றி நன்றிகூறினார்


திண்டிவனம் பகுதி மாதாந்திரக் கூட்டம்  10-6-2014

10-6-2014 அன்று திண்டிவனம்  தொலைபேசி வளாகத்தில் திரு துரைசாமி  தலைமையில்,உதவித்தலைவர் நாராயணசாமி முன்னிலையில்  மாதாந்திரக்கூட்டம் சிறப்பாக நடந்தது.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் சந்திரமோகன்,திருஞானம்,ஜெயராமன்  இவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.  25 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.


கடலூர் பகுதி மாதாந்திரக் கூட்டம்  14-6-2014

கடலூர் பகுதி மாதாந்திரக் கூட்டம்  14-6-2014 அன்று தோழியர் விஜயலட்சுமி தலைமையில் வெகு விமரிசையாக உறுப்பினர்களின் பிறந்தநாள் கூட்டமாகவும்,திருமண நாளாகவும் சிறப்பான விருந்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.50 உறுப்பினர்களுக்கு மேல் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

திருமண நாள் கொண்டாடிய உறுப்பினர்கள்:
தோழியர் K.விஜயலட்சுமி
தோழர் K.நீலகண்டன்
தோழர் A.நாகசுந்தரம்
தோழர் R.கலியபெருமாள்
தோழர் K.கோவிந்தராஜலு
தோழியர்  V.ஜெயமணி
தோழர் R.தண்டபாணி
தோழர் V.பார்த்தசாரதி

பிறந்தநாள் கொண்டாடிய உறுப்பினர்கள்:

தோழர் D.தியாகராஜன்
தோழர் R.கண்ணன்
தோழர் N.P. ஜெகதீசன் 
தோழர் M.K.மாயவன்
தோழர் P.ஏழுமலை
R.நளினி
தோழர் M.பாலச்சந்தர்
தோழர் R.சாலியாபேக்
தோழர் C.சிவநேசன்





















பிறந்தநாள் ,திருமண நாள் கொண்டாடிய தோழர்கள்,தோழியர்களுக்கு பொன்னாடை போத்தி கௌரவித்து பாராட்டும்,வாழ்த்துக்களும் தெரிவித்து மகிழ்ச்சியுடன் கூட்டம் இனிதே நடந்து நிறைவுற்றது.தோழர் N.திருஞானம் எப்போதும் போல் சிறப்பான விருந்துக்கு விழா உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்து இருந்தார்.தோழர் ஸ்ரீநிவாசன் நன்றிகூறினார்