மலர் 11
தர்ணா போராட்டம்
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
BSNL நிறுவன பணி ஒய்வு
பெற்றவர்கள் சார்பாக நமது கோரிக்ககைகளான
1.பென்ஷன் முரண்பாடுகளை தீர்க்கக்கோரி
,2 .ரசீது இன்றி பழைய முறையில் மருத்துவ
படி அளிக்கக்கோரி- வலியிறுத்தி
மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்திட நமது
அனைத்திந்திய சங்கம் அறைகூவல்
விடுத்துள்ளதன் படி BSNL பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 22-5-2013 தேதியில் காலை10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தோழர் K.ரவீந்திரன்தலைமையில்,,தோழர்கள் N.பாலகிருஷ்ணன்,,P.ஜெயராமன்,N.திருஞானசம்பந்தம் முன்னிலையில் K .வெங்கடரமணன்-மாவட்ட செயலர் பெரும் பங்களிப்புடன் தர்ணா நடந்தது.து.
மாவட்டத்தின் நமது உறுப்பினர்கள் 100 பேர் கலந்துக் கொண்டனர்.மகளிர் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தர்ணா முடியும் வரை கலந்து கொண்டு சிறப்பித்தது
எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
தோழர் K.ரவீந்திரன் மாவட்ட தலைவர் தர்ணாவை துவக்கிவைத்து பேசினார்.
தோழர் பாலகிருஷ்ணன் நமது கவுரவ தலைவர் துவக்க உரையாக இந்த கத்திரி கடுமையான
வெய்யிலிலும் தவறாமல் தர்ணாவிற்கு பெருவாரியாக ஊக்கமுடன் கலந்யதுக்கொண்டதை
பாராட்டி பேசினார்.
தோழர் K .வெங்கடரமணன்-மாவட்ட செயலர் தர்ணாவிற்கு வந்த எல்லா
தோழர்களையும் வரவேற்று இதுகாறும் நமது மாவட்டத்தின் செயல்பாடுகளை விவரித்து நமது
சங்கத்தில் இது வரை 109 ஆயுள் கால உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்து ,மேலும் மற்றவர்களும் விரைவில் சேர்ந்து நமது
சங்கத்தினை பலப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர் தான் எவ்வாறு பல்வேறு விடுபட்ட அல்லது குறைவான பென்ஷன்
பெற்றவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தார் என்பதினை விளக்கி கூறி எல்லோரும்
தங்களுக்கும்,நமது ஒய்வூதியர்கள் அனைவருக்கும் சரியான பென்ஷன் போடப்படுகிறதா
என்பதை உறுதி செய்துக் கொள்ளுமாறும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தன்னை அணுகவும்
என்று கூறினார்.
கீழ்கண்ட சகோதர சங்க
நிர்வாகிகளும்,சிறப்பு அழைப்பாளர்கும் கலந்துகொண்டு போராட்டத்தினை வாழ்த்தி
பேசினார்கள்.
1. C.பாண்டுரங்கன் மாவட்டச்செயலர் SNEA
2 R.ஸ்ரீதர் மாவட்டச்செயலர் NFTE
3 P.வெங்கடேசன் மாவட்டச்செயலர் AIBSNLEA
4 மருதவாணன் செயலர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் கடலூர்.
தோழர்கள் துரைசாமி உதவி தலைவர்,R.பூபாலன் பொருளாளர்,T.மணிவண்ணன் சிதம்பரம்,வெற்றி விழுப்புரம்,G.வேலாயுதம்,நீலகண்டன் ஆகியோரும் நாம் எப்படி நமது
உறுப்பினர்களை வளர்த்து,அவர்களின் தேவைகளை தீர்க்க வேண்டும் என்று விளக்கினர்.
சமீபத்தில் விருப்ப ஓய்வில் வந்த தோழியர் விஜயலட்சுமி
(பால்கி அவர்களின் துணைவியார்) தர்ணா வில் கலந்துக் கொண்டு நமது சங்கத்தில்
சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறி சிற்றுரை ஆற்றினார்.
ஒரு சிலர் தங்களது பென்ஷன் கணக்கினை கொண்டுவந்து
சரிபார்த்துச் சென்றனர்.
இறுதியாக, தோழர் ,N.திருஞானசம்பந்தம் எல்லோருக்கும் நன்றி கூறினார்.
நோட்டீஸ்,பேனர்,,ஷாமியானா,உணவு,மைக் முதலிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே
செய்தார்.பத்திரிகை நிருபர்களுக்கும் தர்ணா செய்திகளையும் கொடுக்க ஏற்பாடுகள் செய்தார்.இதனை
எல்லோரும் பாராட்டினர்.